இந்த வரலாறு தெரியாமல் ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்!

தமிழர்கள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழ நாடு என்று பல நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாடு என்னும் புரிதல் தமிழர்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் செய்தி.

பெருந்தலைவர் ஆட்சிகாலத்துக்கு முன்பே, பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்நாடு என்று பாடி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் முன்பு, பெரியபுராணம், கம்பராமாயணம், தொல்காப்பிய உரை ஆகியவற்றில் தமிழ்நாடு எனும் பெயர் காணக்கிடைக்கிறது. 1400 ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட பரிபாடலில் கூட தமிழ்நாடு என்னும் பெயர் இருக்கிறது. அதற்கும் முன்பு, ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கூட தமிழ்நாடு என்ற பெயர் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் ஒரு பெயரை, நாங்கள்தான் வைத்தோமென்று திமுக கட்சி சொல்வது அண்டப்புளுகு ஆகாசப்புளுகன்றி வேறில்லை.


Discover more from தமிழ்த்தாயின் திருமகன்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment