இந்தியாவை ஆட்சிசெய்த கற்பனை கதாநாயகன்! | The fictional hero who ruled India!

அறிவில் சிறந்தவர்கள் என்றும் ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெறும் புராணக்கதைகள் மூலமாகவும், பொய்யான வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நாங்கள் அறிவாளிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே அப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் அடிமையாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் சாணக்கியன்.

சாணக்கியன்தான் சந்திரகுப்த மௌரியரை ஆளாக்கி மௌரிய அரசை உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலே சாணக்கியன்தான் தலைசிறந்த அறிவாளி என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யார் இந்த சாணக்கியர்? சாணக்கியர் தொடர்பான வரலாற்று சான்றுகள் என்ன? விளக்குகிறது இந்தக்காணொளி.

அறிவு உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதனை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதே ஒரு நேர்மையற்ற செயல். அப்படி இருக்கையில், மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அறிவாளிகள் என்ற மாய பிம்பத்தை உருவாக்க முனைவது எவ்வளவு அறமற்ற செயலாக இருக்குமென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு அறிவுத்திருட்டுக்கு எதிரான குரலாக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


Discover more from தமிழ்த்தாயின் திருமகன்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment