அர்த்தநாரீஸ்வரர்: கடவுளா? கண்ணகியா? | Ardhanarishvara: God or Kannagi?

கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் பல வடிவங்களில் இருக்கிறது. கண்ணகியின் சாபத்திற்குப் பின் தமிழ்நாட்டில் பஞ்சம் நிலவியதால், மழைக்காக கண்ணகியிடம் வேண்டினார்கள். அதுதான் மாரியம்மன் வழிபாடு. செல்லத்தம்மன், பகவதியம்மன் என்ற பெயர்களில் கண்ணகி வழிபாடு உண்டு. ஆனால் அர்த்தநாரீஸ்வரர் என்பது கண்ணகியின் வழிபாடாக இருக்கலாம் என்ற யூகங்கள் நிலவுகிறது. அது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை எடுத்தது தெரியும். கண்ணகி ஒரு மார்பை இழந்தவர் என்பதால் சிலை செய்யும்போது மார்பு சிதைந்த நிலையில் இருக்கும்படி சிலை செய்தனர். பிற்காலத்தில் இது அர்த்தநாரீஸ்வரர் வழிபாடாக மாறியது.


Discover more from தமிழ்த்தாயின் திருமகன்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment