சல்லியர்கள் – எதிரிகளால் கூட குறைசொல்ல முடியாத படம்

மேதகு படத்தைப்போல இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிட்டு. சல்லியர்கள், ஈழத்தமிழர் வரலாற்றின் ஒரு மைல் கல். தமிழர் வரலாற்றைச் சொல்லும் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட முடியவில்லை என்பது தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் இந்தப் படத்தைத் தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் இயக்குனர் கிட்டு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சல்லியர்கள் திரைப்படத்தைத் திரையிட மறுத்த PVR திரையரங்குகளைத் தமிழர்கள் புறக்கணிப்போம். சல்லியர்கள் திரைப்படத்தை…

கழுகுமலை வெட்டுவான் கோவிலும்! ஓர் அதிசயப் பறவையும்!

குடைவரைக்கோவில் என்பது தமிழர்களின் கலை. முதலில் குடைவரைக்கோவில்கள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக்கோவில்களே இதற்கு சான்று. மாமல்லபுரத்து குடைவரைக்கோவில்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் எல்லோரா குடைவரைக்கோவில்கள் கட்டப்பட்டது. ஆனால் எல்லோரா குடைவரைக்கோவில்கள் மலையை மேலிருந்தே குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா குடைவரைக்கோவில்கள் பிரம்மாண்டத்தின் உச்சமென்று சொல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவிலும் எல்லோரா குடைவரைக்கோவில் போலவே மேலிருந்து மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில். தமிழ்நாட்டில் இப்படிக் கட்டப்பட்ட ஒரே கோவில் கழுகுமலை வெட்டுவான் கோவில்தான். இது…

தமிழ்க்கடவுள் முருகன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்!

தமிழ்க்கடவுள் முருகன் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. முருகனின் பெயர், வாகனம், தாய் தந்தை, மனைவி உள்ளிட்ட அனைத்துத் தரவுகளிலும் ஆரியக் கதைகள் முருகனது வரலாற்றையே மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. முருகன் பற்றிய சான்றுகளை சங்க இலக்கியங்கள் மூலமாகக் கொடுத்திருக்கிறேன். காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

பழமொழிகளில் புதைந்த தமிழ் வரலாறு! | Tamil Proverbs with the history of Tamilnadu!

பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தாய்லாந்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை!

தமிழ்நாட்டில் நடந்த பிரிட்டிஷ் ஆட்சி பிடிக்காமல், தாய்லாந்து நாட்டுக்குச் சென்ற ஒரு குழுவினரை வைத்திப் படையாட்சி என்ற தமிழர் வழிநடத்திச் சென்றிருந்தார். வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்ல, தாய்லாந்து நாட்டில் மாரியம்மனுக்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார். தாய்லாந்து அரசாங்கமே வைதிப்படையாட்சி அவர்களுடையப் பெயரை கோவிலுக்கு அருகிலிருக்கும் தெருவுக்கு வைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறது. வைத்திப் படையாச்சியின் வாழ்க்கை வரலாறு ஆராய்ந்து தமிழ் மக்களிடையே கொண்டு வரப்பட வேண்டும் என்பது இந்தக் காணொளியின் முதன்மையான நோக்கம். தாய்லாந்து நாட்டுக்கு செல்லும் தமிழர்கள்…

அர்த்தநாரீஸ்வரர்: கடவுளா? கண்ணகியா? | Ardhanarishvara: God or Kannagi?

கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் பல வடிவங்களில் இருக்கிறது. கண்ணகியின் சாபத்திற்குப் பின் தமிழ்நாட்டில் பஞ்சம் நிலவியதால், மழைக்காக கண்ணகியிடம் வேண்டினார்கள். அதுதான் மாரியம்மன் வழிபாடு. செல்லத்தம்மன், பகவதியம்மன் என்ற பெயர்களில் கண்ணகி வழிபாடு உண்டு. ஆனால் அர்த்தநாரீஸ்வரர் என்பது கண்ணகியின் வழிபாடாக இருக்கலாம் என்ற யூகங்கள் நிலவுகிறது. அது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை எடுத்தது தெரியும். கண்ணகி ஒரு மார்பை இழந்தவர் என்பதால் சிலை செய்யும்போது மார்பு…

இந்தியாவை ஆட்சிசெய்த கற்பனை கதாநாயகன்! | The fictional hero who ruled India!

அறிவில் சிறந்தவர்கள் என்றும் ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெறும் புராணக்கதைகள் மூலமாகவும், பொய்யான வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நாங்கள் அறிவாளிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே அப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் அடிமையாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் சாணக்கியன். சாணக்கியன்தான் சந்திரகுப்த மௌரியரை ஆளாக்கி மௌரிய அரசை உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலே…

இந்த வரலாறு தெரியாமல் ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்!

தமிழர்கள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழ நாடு என்று பல நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாடு என்னும் புரிதல் தமிழர்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. பெருந்தலைவர் ஆட்சிகாலத்துக்கு முன்பே, பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்நாடு என்று பாடி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் முன்பு, பெரியபுராணம், கம்பராமாயணம்,…

திராவிடம் – ஆரிய மடத்தின் A Team | Dravidam – A Team of Ariyan

திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி ஏமாந்து போகும் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் தமிழுக்கு வந்த சோதனை. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திராவிடம் முன் வைக்கும் சான்றுகளின் உண்மைத்தன்மையை அலசுகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு…

18 கோடிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட பைபிள் | Ancient Bible Stolen for 18 Crores

தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதனையும் 18 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இரண்டு ஜெர்மானியர்கள் திருடிக்கொண்டு போய்விட்டனர். தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் பெருமைமிகு ஆவணங்களின் மீது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அக்கறை அவ்வளவுதான். அந்த பைபிள் மட்டுமல்ல,…

ஈழம் – தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி | Eelam – A teardrop in the middle of ocean

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழர்களுக்கு ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்ற புரிதல் இல்லை என்பதுதான். ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து, தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். In the 21st century, our Tamil peoples were massacred…

மேதகு – ஒரு கண்ணோட்டம்

வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம், சம்பவங்கள் அனைத்துக்கும் படக்குழுவினரே பொறுப்பு” என்று முதல் திரையிலே நமது புருவங்களை உயரச்செய்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். தெருக்கூத்துக் கலைஞர்கள், தமிழினத்தலைவர் பிரபாகரனின் வரலாற்றைச் சொல்வதுபோல திரைப்படத்தை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. தெருக்கூத்து என்றாலே, ராமாயணம், மகாபாரதம் போன்ற வடக்கத்திய கதைகளை மட்டும் பெரும்பாலும்…

மேதகு

அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும். மனைவியோடும், பிள்ளைகளோடும் மாடமாளிகையில் காலம் கழித்திருக்க முடியும். ஆனால், காடுதான் பெரும்பாலும் அவருக்கு வீடாக இருந்தது. பிறந்த நாட்டின் விடுதலை நெருப்பு ஒன்றே அவர் நெஞ்சில் பற்றி எரிந்தது. முதுகுக்குப் பின்னால் இந்தியா என்ற மாபெரும் துரோகத்தை சுமந்து கொண்டு, முகத்துக்கு…

தமிழர்களின் அடிமை வாழ்வு – பாகம் 2

முதல் பாகத்தின் தொடர்ச்சி  தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை…

தமிழர்களின் அடிமை வரலாறு – பாகம் 1

வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக்  கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில்…

தமிழர்களின் ஒற்றுமை

ஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள்  தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில்,  எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….

சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்

நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில்…

மக்கள் மறந்த முதல் மகாத்மா

துரத்தியடிக்கப்பட்ட மகாத்மா அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான். திருமண வீட்டு வாசலில் அவன்…

தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…