பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Tag: திருக்குறள்
முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு
அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…
