பழமொழிகளில் புதைந்த தமிழ் வரலாறு! | Tamil Proverbs with the history of Tamilnadu!

பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு

நான்கு நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே…