பழமொழிகளில் புதைந்த தமிழ் வரலாறு! | Tamil Proverbs with the history of Tamilnadu!

பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சில பழமொழிகளைக் காணலாம். காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான்  இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…