தூத்துக்குடியில் கப்பல் தளம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசும் மாநில அரசும் இறங்கியிருக்கிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் அதுவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் சில நிலங்களை கையகப்படுத்த விழைகிறது. அரசாங்கம் கையகப்படுத்த எண்ணும் நிலங்களுக்குள் முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உப்பளங்கள் இருக்கிறது. உப்பளங்கள் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். உப்பளத்தொழில் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் உப்பளங்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் பாதிப்பு வராத…
Tag: ராஜேஷ் லிங்கதுரை
கழுகுமலை வெட்டுவான் கோவிலும்! ஓர் அதிசயப் பறவையும்!
குடைவரைக்கோவில் என்பது தமிழர்களின் கலை. முதலில் குடைவரைக்கோவில்கள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக்கோவில்களே இதற்கு சான்று. மாமல்லபுரத்து குடைவரைக்கோவில்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் எல்லோரா குடைவரைக்கோவில்கள் கட்டப்பட்டது. ஆனால் எல்லோரா குடைவரைக்கோவில்கள் மலையை மேலிருந்தே குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா குடைவரைக்கோவில்கள் பிரம்மாண்டத்தின் உச்சமென்று சொல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவிலும் எல்லோரா குடைவரைக்கோவில் போலவே மேலிருந்து மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில். தமிழ்நாட்டில் இப்படிக் கட்டப்பட்ட ஒரே கோவில் கழுகுமலை வெட்டுவான் கோவில்தான். இது…
