கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் | 124வது பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட சிறப்புரை. இந்த உரையில் பெருந்தலைவர் காமராஜரின் எளிமை, நேர்மை, சுயமரியாதை, மனிதநேயம் மற்றும் கல்விக்காக அவர் செய்த மகத்தான சேவைகள் பற்றிய பல உண்மை சம்பவங்கள் பகிரப்படுகின்றன. இந்த உரையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்: ✅ மகாத்மா காந்தி மீது காமராஜர் கொண்ட மரியாதை மற்றும் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத குணம்.✅ மக்களின் சுயமரியாதையை மதித்த தலைவர் என்ற அவரது உயர்ந்த பண்பு.✅ ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து கல்வியை…

கழுகுமலை வெட்டுவான் கோவிலும்! ஓர் அதிசயப் பறவையும்!

குடைவரைக்கோவில் என்பது தமிழர்களின் கலை. முதலில் குடைவரைக்கோவில்கள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக்கோவில்களே இதற்கு சான்று. மாமல்லபுரத்து குடைவரைக்கோவில்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் எல்லோரா குடைவரைக்கோவில்கள் கட்டப்பட்டது. ஆனால் எல்லோரா குடைவரைக்கோவில்கள் மலையை மேலிருந்தே குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா குடைவரைக்கோவில்கள் பிரம்மாண்டத்தின் உச்சமென்று சொல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவிலும் எல்லோரா குடைவரைக்கோவில் போலவே மேலிருந்து மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில். தமிழ்நாட்டில் இப்படிக் கட்டப்பட்ட ஒரே கோவில் கழுகுமலை வெட்டுவான் கோவில்தான். இது…