There is something even more disgraceful than being enslaved — not realizing that we are living in slavery. Sadly, this statement applies very precisely to a large section of Tamils. Many people do not seem to care who rules our state. But when it comes to power, there is a strange mindset that native Tamils must never rule their own land. Because of this mentality, for a long time people from outside the native Tamil community have governed Tamil Nadu (Tamil Nadu). If this situation is to change, Tamils must first break free from this slave mentality. Only when that happens can Tamils live on this land with a true sense of freedom, dignity, and self-respect.
அடிமைப்பட்டுக் கிடப்பதை விட கேவலமானது நாம் அடிமையாய் இருக்கிறோமென்று உணராமல் இருப்பது. இந்த வாக்கியம் பெரும்பாலான தமிழர்களுக்கு கனக்கச்சிதமாய்ப் பொருந்தும். நமது மாநிலத்தை எவன் ஆண்டாளும் கவலையில்லை, ஆனால் பூர்வக்குடி தமிழர்கள் மட்டும் ஆட்சி செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் தமிழ்நாட்டைக் காலங்காலமாய் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், அடிமை மனநிலையில் இருந்து தமிழர்கள் மீண்டு வரவேண்டும். அப்படி மீண்டு வந்தால்தான் தமிழர்கள் இந்த மண்ணில் விடுதலை உணர்வோடு வாழ முடியும்.
Subscribe to get the latest posts sent to your email.
Published by தமிழ்த்தாயின் திருமகன்
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by தமிழ்த்தாயின் திருமகன்