உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளமா?

தூத்துக்குடியில் கப்பல் தளம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசும் மாநில அரசும் இறங்கியிருக்கிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் அதுவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் சில நிலங்களை கையகப்படுத்த விழைகிறது. அரசாங்கம் கையகப்படுத்த எண்ணும் நிலங்களுக்குள் முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உப்பளங்கள் இருக்கிறது. உப்பளங்கள் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். உப்பளத்தொழில் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் உப்பளங்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் பாதிப்பு வராத…

தமிழன் ஏன் அடிமையானான்?

அடிமைப்பட்டுக் கிடப்பதை விட கேவலமானது நாம் அடிமையாய் இருக்கிறோமென்று உணராமல் இருப்பது. இந்த வாக்கியம் பெரும்பாலான தமிழர்களுக்கு கனக்கச்சிதமாய்ப் பொருந்தும். நமது மாநிலத்தை எவன் ஆண்டாளும் கவலையில்லை, ஆனால் பூர்வக்குடி தமிழர்கள் மட்டும் ஆட்சி செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் தமிழ்நாட்டைக் காலங்காலமாய் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், அடிமை மனநிலையில் இருந்து தமிழர்கள் மீண்டு வரவேண்டும். அப்படி மீண்டு வந்தால்தான் தமிழர்கள் இந்த மண்ணில்…

சல்லியர்கள் – எதிரிகளால் கூட குறைசொல்ல முடியாத படம்

மேதகு படத்தைப்போல இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிட்டு. சல்லியர்கள், ஈழத்தமிழர் வரலாற்றின் ஒரு மைல் கல். தமிழர் வரலாற்றைச் சொல்லும் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட முடியவில்லை என்பது தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் இந்தப் படத்தைத் தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் இயக்குனர் கிட்டு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சல்லியர்கள் திரைப்படத்தைத் திரையிட மறுத்த PVR திரையரங்குகளைத் தமிழர்கள் புறக்கணிப்போம். சல்லியர்கள் திரைப்படத்தை…

திராவிடம் – நறுக்குவோம் பகையின் வேர்

திராவிடம் என்பது தமிழ்நாட்டைத் தமிழரல்லாதவர்கள் ஆளவும் கொள்ளையடிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சதிகாரக் கூட்டமைப்பு. பல தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட தலைவர்களும் திராவிடத்தோடு உறவாடியிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் கருவி என்பதை உணர்ந்து கொண்டனர். திராவிடம் பற்றி சில தலைவர்கள் சொன்ன கருத்துக்களைக் காண்போம். அயோத்திதாசப் பண்டிதர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தந்தை சி.பா. ஆதித்தனார், ஒரிசா பாலசுப்ரமணியம், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் திராவிடம் பற்றி சொன்ன கருத்துக்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன….

இந்த வரலாறு தெரியாமல் ‘தமிழ்நாடு’ என்று சொல்லாதீர்கள்!

தமிழர்கள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, ஈழ நாடு என்று பல நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாடு என்னும் புரிதல் தமிழர்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. பெருந்தலைவர் ஆட்சிகாலத்துக்கு முன்பே, பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்நாடு என்று பாடி விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் முன்பு, பெரியபுராணம், கம்பராமாயணம்,…

திராவிடம் – ஆரிய மடத்தின் A Team | Dravidam – A Team of Ariyan

திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி ஏமாந்து போகும் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் தமிழுக்கு வந்த சோதனை. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் திராவிடம் முன் வைக்கும் சான்றுகளின் உண்மைத்தன்மையை அலசுகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு…

ஈழம் – தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி | Eelam – A teardrop in the middle of ocean

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழர்களுக்கு ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்ற புரிதல் இல்லை என்பதுதான். ஈழத்தின் பூர்வகுடிகள் யார் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து, தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். In the 21st century, our Tamil peoples were massacred…

தமிழர்கள் இந்தியாவை இழந்த கதை! | How Tamil People Lost India!

தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், பிற மாநிலத்தவர் அந்த மண்ணை ஆட்சிசெய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஆட்சி செய்வது மிக மிக அரிது. இந்த நிலை மாறினால்தான் தமிழர் வாழ்வில் முன்னேற்றம் வரும். இனி வரும் காலங்களில் தமிழரல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆள முடியாது என்ற நிலை வரும். அதற்கான முதல் படிதான் இந்தக் காணொளி. அனைவரும் காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ராமருக்கு All The Best சொன்ன ஆதாம்! | आदम ने कहा भगवान राम को शुभकामनाएँ !

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கு இடையே இருப்பது மண்ணாலான இணைப்பு என்கிறது அறிவியல். நாசாவே சொல்லிவிட்டது அது ராமர் கட்டிய பாலம் என்கிறது இந்து மதம். இல்லை அது ஆதாம் பாலம் என்கிறது கிறிஸ்தவ மதம். இல்லை இல்லை அது சேதுபதி மன்னர்கள் ஆண்டதால் அதனை சேதுப்பாலம் என்கிறார்கள் ஒரு சாரார். அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன?…

காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டாரா? | Trichy Siva controversial speech about Kamarajar

எளிமையின் அடையாளம் காமராஜர். ஒரு அரசியல்வாதி இப்படித்தான் இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர். வாழ்நாள் முழுவதும் ஒரு வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். திருச்சி சிவா என்னும் வரலாற்றைப் படிக்காத ஒருவர், காமராஜர் AC இல்லாமல் தூங்க மாட்டார். காமராஜர் சென்ற இடமெல்லாம் கருணாநிதி AC வைத்துக் கொடுத்தார் என்றெல்லாம் பச்சைப்பொய்களை சொல்கிறார். இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் மீது சொன்ன அவதூறுகளுக்கான பதிலடிதான் இந்தக் காணொளி. Kamarajar is the epitome…

தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்

தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக்  குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில்,…

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு

நான்கு நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே…

வாக்குத் தவறானால்?

தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவர் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார் . அவர் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவர் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவருக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை…

தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…