உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளமா?

தூத்துக்குடியில் கப்பல் தளம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசும் மாநில அரசும் இறங்கியிருக்கிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் அதுவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் சில நிலங்களை கையகப்படுத்த விழைகிறது. அரசாங்கம் கையகப்படுத்த எண்ணும் நிலங்களுக்குள் முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உப்பளங்கள் இருக்கிறது. உப்பளங்கள் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். உப்பளத்தொழில் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் உப்பளங்களுக்கும் மீன்பிடித்தொழிலுக்கும் பாதிப்பு வராத…

தமிழன் ஏன் அடிமையானான்?

அடிமைப்பட்டுக் கிடப்பதை விட கேவலமானது நாம் அடிமையாய் இருக்கிறோமென்று உணராமல் இருப்பது. இந்த வாக்கியம் பெரும்பாலான தமிழர்களுக்கு கனக்கச்சிதமாய்ப் பொருந்தும். நமது மாநிலத்தை எவன் ஆண்டாளும் கவலையில்லை, ஆனால் பூர்வக்குடி தமிழர்கள் மட்டும் ஆட்சி செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் தமிழ்நாட்டைக் காலங்காலமாய் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், அடிமை மனநிலையில் இருந்து தமிழர்கள் மீண்டு வரவேண்டும். அப்படி மீண்டு வந்தால்தான் தமிழர்கள் இந்த மண்ணில்…

அர்த்தநாரீஸ்வரர்: கடவுளா? கண்ணகியா? | Ardhanarishvara: God or Kannagi?

கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் பல வடிவங்களில் இருக்கிறது. கண்ணகியின் சாபத்திற்குப் பின் தமிழ்நாட்டில் பஞ்சம் நிலவியதால், மழைக்காக கண்ணகியிடம் வேண்டினார்கள். அதுதான் மாரியம்மன் வழிபாடு. செல்லத்தம்மன், பகவதியம்மன் என்ற பெயர்களில் கண்ணகி வழிபாடு உண்டு. ஆனால் அர்த்தநாரீஸ்வரர் என்பது கண்ணகியின் வழிபாடாக இருக்கலாம் என்ற யூகங்கள் நிலவுகிறது. அது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை எடுத்தது தெரியும். கண்ணகி ஒரு மார்பை இழந்தவர் என்பதால் சிலை செய்யும்போது மார்பு…

திராவிடம் – நறுக்குவோம் பகையின் வேர்

திராவிடம் என்பது தமிழ்நாட்டைத் தமிழரல்லாதவர்கள் ஆளவும் கொள்ளையடிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சதிகாரக் கூட்டமைப்பு. பல தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட தலைவர்களும் திராவிடத்தோடு உறவாடியிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் கருவி என்பதை உணர்ந்து கொண்டனர். திராவிடம் பற்றி சில தலைவர்கள் சொன்ன கருத்துக்களைக் காண்போம். அயோத்திதாசப் பண்டிதர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், தந்தை சி.பா. ஆதித்தனார், ஒரிசா பாலசுப்ரமணியம், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் திராவிடம் பற்றி சொன்ன கருத்துக்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன….

இந்தியாவை ஆட்சிசெய்த கற்பனை கதாநாயகன்! | The fictional hero who ruled India!

அறிவில் சிறந்தவர்கள் என்றும் ஆளுமைத்திறனுடன் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெறும் புராணக்கதைகள் மூலமாகவும், பொய்யான வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நாங்கள் அறிவாளிகள் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே அப்படிப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் அடிமையாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் சாணக்கியன். சாணக்கியன்தான் சந்திரகுப்த மௌரியரை ஆளாக்கி மௌரிய அரசை உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலே…

18 கோடிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட பைபிள் | Ancient Bible Stolen for 18 Crores

தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் அதனையும் 18 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இரண்டு ஜெர்மானியர்கள் திருடிக்கொண்டு போய்விட்டனர். தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் பெருமைமிகு ஆவணங்களின் மீது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அக்கறை அவ்வளவுதான். அந்த பைபிள் மட்டுமல்ல,…

ராமருக்கு All The Best சொன்ன ஆதாம்! | आदम ने कहा भगवान राम को शुभकामनाएँ !

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கு இடையே இருப்பது மண்ணாலான இணைப்பு என்கிறது அறிவியல். நாசாவே சொல்லிவிட்டது அது ராமர் கட்டிய பாலம் என்கிறது இந்து மதம். இல்லை அது ஆதாம் பாலம் என்கிறது கிறிஸ்தவ மதம். இல்லை இல்லை அது சேதுபதி மன்னர்கள் ஆண்டதால் அதனை சேதுப்பாலம் என்கிறார்கள் ஒரு சாரார். அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன?…

எனக்கு மட்டும் ஏன்?

எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில்.  எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும் உனது நண்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. இதுவல்லவோ வாழ்க்கை என்று நீ வியந்து பார்க்கும் எல்லோருக்குமே, நாம் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தி அவ்வப்போது எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை.  இனி வாழவேண்டாமென்ற முடிவுக்கு உன்னைத் தள்ளிய…

ஏன் கடவுள்?

ஈ.வே.ராமசாமியை விமர்சிப்போம்  கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று ஈ.வே.ராமசாமி சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, ஈ.வே.ராமசாமியைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு ஈ.வே.ராமசாமி மீது மதிப்பும்  உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், ஈ.வே.ராமசாமியை விமர்சனம் செய்தால் மட்டும் கொந்தளிக்கிற…

பட்டாம்பூச்சியில் ஏன் பாகுபாடு

ஆண்குழந்தைகள் விதிவிலக்கல்ல நம் சமூகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு சமூகக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அது கட்டாயத் தேவையும் கூட. உயர்ந்த பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாடுகளில் கூட பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பது அருவெறுப்பான உண்மை. சினிமாக்களில் குத்துப்பாடல்களில் அரைகுறையாக ஆட விடுவதில் துவங்கி, விளையாட்டு மைதானங்களில்  உற்சாகமூட்டும் பெண்கள் என்று கீழ்த்தரமான ஆடைகளுடன் ஆட விடுவது  வரை பெண்களை ஒரு போதைப் பொருள்போல பயன்படுத்தும் அவலம் இன்றும்…

பெற்றோர்களின் கவனத்திற்கு

குழந்தைகள் உலகம் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடன் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. குழந்தைக்கு எப்படி இந்த உலகம் புதிதோ, அதேபோல பெற்றோர்களுக்கும் குழந்தைகள் உலகம் என்பது புதிதுதான். வளரும் குழந்தைகள் எளிதாக நமது உலகுக்குள் அடியெடுத்து வைத்து அதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ந்துவிட்ட பல பெற்றோர்களால் குழந்தைகள் உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. இந்த இரண்டு உலகங்களும் இணையும் இடத்தில்தான் தரமான தலைமுறைகள் உருவாக முடியும். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்களிடம்…